Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! கவனம் தேவை…! எச்சரிக்கை வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே…!
இன்று முதல் உங்களுக்கு சந்திராஷ்டம தினம் தொடங்குவதால் எதிலும் கவனம் தேவை.

மற்றவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். யாரிடமும் பகை பாராட்டாமல் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். யாரைப் பற்றிய விமர்சனங்கள் ஏதும் வேண்டாம்.
மற்றவருடைய விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். பேச்சையும் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் சிறந்தது.
யாருக்கும் எவ்விதமான ஜாமீன் கையொப்பமிட வேண்டாம். சந்திராஷ்டமம் முடியும் பொழுது நீங்கள் எதையும் பார்த்துக் கொள்ளலாம்.தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு சூழ்ச்சி செய்வார்கள். அதனால் கவனம் தேவை.கடினமான உழைப்பிற்கு என்றோ ஒருநாள் வெற்றி கிடைக்கும். எவ்விதமான பெரிய பிரச்சினைகள் வந்தாலும் அது சுமுகமாகவே முடியும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை சுமாராகவே தான் இருக்கும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகவே தான் இருக்கும். இன்று உங்களுக்கு செலவு அதிகப்படியாக இருக்கும். இன்று நீங்கள் செலவை திட்டமிட்டு செய்வது சிறந்தது.இன்று நீங்கள் போட்டி பொறாமைகளை எதிர்கொள்ள வேண்டும். இன்று உங்களுக்கு இறைவழிபாடு என்பது முக்கியமான தேவை.ஆலயம் சென்று வழிபட்டால் இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் திட்டங்களை சிறப்பாக புரிந்துக் கொண்டு செயல்படுவதே சிறந்தது. கணவன் மனைவிக்கு இடையே சில பிரச்சனைகள் வரக்கூடும்.

ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொள்வது சிறந்தது.பெற்றோரின் அறிகுறைப்படி கேட்டு நடப்பது சிறந்தது. சகோதர சகோதரிகளின் பாசம் இன்று அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு சிறிது காதல் கசப்பு ஏற்படுத்தும். பேச்சில் நிதானம் தேவை. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். இன்று உங்களுக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கிறது. இன்று நீங்கள் படித்த படுத்தி படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் சிறந்தது. இன்று உங்களுக்கும் விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இன்று நீங்கள் முருகன் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம் ஊதா மற்றும் நீலம் நிறம்.

Categories

Tech |