விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று சுமாரான பணவரவு உள்ள நாளாக உள்ளது.
இன்று உங்களுக்கு மன சஞ்சலம் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் மனதில் இனம்புரியாத குழப்பங்கள் கூட வரக் கூடும்.
சிலருக்கு வழக்குகளால் வெற்றி செலவு கூட வர ஏற்படும். இன்று உங்களுக்கு காரிய தடை ஏற்படும் ஆதலால், நீங்கள் காரியத்தை நிதானமாக செயல்படுத்த வேண்டும். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். இன்று உங்களுக்கு பண வரவு தாமதமாகவே வந்து சேரும். பெரியோரை நீங்கள் மதித்து நடப்பது சிறந்தது. பெற்றோர்கள் சொல்படி கொஞ்சம் கேட்டு நடந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவு தான் முன்னேற்றம் இருக்கும். முன்னேற்றம் என்பது தாமதமாகத்தான் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலை காணப்படும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு நேரத்திற்கு உட்கொள்வது சிறந்தது. இன்று உங்களுக்கு முதுகு வலி மற்றும் தோள்பட்டை எரிச்சல் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. காரசாரமான பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
இன்று நீங்கள் வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இன்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே சில பிரச்சனைகள் வரக்கூடும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
படித்த பாடத்தை படித்தபின் எதிர்பார்ப்பது மிகவும் சிறந்தது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். நீங்கள் விஷ்ணு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் நீலம் நிறம்.