மிதுனம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு தேவையான அளவு பணம் இருப்பதால் திடீரென ஏற்படக்கூடிய செலவுகளையும் சமாளித்து விடுவீர்கள்.
தேவையில்லாத சில நபர்கள் உங்கள் மீது வீண் பழி சுமத்த கூடும். இன்று உங்கள் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இன்று உங்கள் வாழ்க்கைத் துணை உங்களின் மனதை புரிந்து கொள்வார்கள். இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள்.
இன்று உங்கள் தொழில் மற்றும் வியாபாரம் விரிவடையும். குழந்தைகளின் உயர் கல்விக்கான கடன் தடையின்றி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளும் பெற்றோர் சொல்வதை கூர்ந்து கவனிப்பார்கள். அரசுப் பணியில் உள்ளவர்கள் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். மூத்த சகோதரர்களின் ஒத்துழைப்பு இன்று கண்டிப்பாக கிடைக்கும்.
இன்று உங்களுக்கு எதிலும் வெற்றி என்பது எளிதாக கிடைத்துவிடும். உங்கள் மனதில் இனம் புரியாத குழப்பம் வந்து சேரும். நீங்கள் தான் அதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். யாரைப் பற்றியும் எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். மாலைக்குள் உங்களுக்கு எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும். இன்று மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பாராத அளவு முன்னேற்றம் உள்ளது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அளிக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீலம் நிறம்.