Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (10-06-2022) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

10-06-2022, வைகாசி 27, வெள்ளிக்கிழமை, தசமி திதி காலை 07.26 வரை பின்பு ஏகாதசி திதி பின்இரவு 05.46 வரை பின்பு வளர்பிறை துவாதசி.

சித்திரை நட்சத்திரம் பின்இரவு 03.36 வரை பின்பு சுவாதி.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 0.

ஏகாதசி விரதம்.

பெருமாள் வழிபாடு நல்லது.

சுபமுகூர்த்த நாள்.

சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00.

நாளைய ராசிப்பலன் –  10.06.2022

மேஷம்

உங்களின் ராசிக்கு நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எதிர்பாராத தன வரவால் மகிழ்ச்சி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிட்டும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும். வீண் செலவுகளால் பணப்பிரச்சினை ஏற்படலாம். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு பணவரவு சுமாராக இருக்கும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். தொழில் விருத்திக்காக எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.

கடகம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் செலவுகள் குறைந்து காணப்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் கிட்டும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் ரீதியான போட்டிகளில் சாதகப்பலன் கிட்டும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பிள்ளைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி

உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டம் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வேலையில் புதிய மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு நீங்கள் மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். நிதானத்தை கடை பிடிப்பதன் மூலம் விரயங்களை தவிர்க்கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு உத்தியோக ரீதியாக புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் லாபம் அடைவீர்கள்.

தனுசு

உங்களின் ராசிக்கு வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று பணப் பிரச்சினைகள் குறையும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வர வேண்டிய பணவரவில் சில தடை தாமதங்கள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களால் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேற குடும்ப உறுப்பினர்கள் உதவியாக  இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களில் உள்ள பிரச்சினை தீரும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் நிம்மதி இல்லாத சூழ்நிலை உண்டாகும். மனக்குழப்பம் அலைச்சல் சோர்வு ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கோபத்தை குறைத்துக் கொண்டு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மதியத்திற்கு பின் மனஅமைதி இருக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். மற்றவர்கள் மிது தேவையில்லாத கோபம் உண்டாகும். உங்கள் ராசிக்கு மாலை 04.06 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.

Categories

Tech |