Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…! கட்டுப்பாடு தேவை..! முயற்சிகள் மேலோங்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே…!
இன்று நீங்கள் யோசித்து செயல்பட கூடிய நாளாகவே இருக்கும்.

மன உளைச்சல் ஓரளவு சரியாகிவிடும். மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் இன்று தீர்ந்துவிடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் தேவை. இன்று உங்களுக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். அதற்கு நீங்கள் உணவு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். எண்ணெய் மற்றும் காரம் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது சிறந்தது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடும் பொழுது சிந்தித்து செயல்படுவதே சிறந்தது. பெரிய முதலீடுகள் செய்யும் பொழுது கவனம் தேவை. கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் ஓரளவு அனுகூலம் பெறலாம்.

தொலைந்து போன பொருள் நீண்ட நாள்களுக்குப் பின்பு உங்கள் கை வந்து சேரும். இன்று பயணங்கள் செல்ல நேரிடும். பயணத்தின் பொழுது எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்கள் மீது அன்பு கொள்வார்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பெரிய அளவு எந்தவிதமான பிரச்சினையும் இல்லை. அனைத்தும் சுமுகமாகவே இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு முயற்சிகள் ஓரளவு பலிக்கும். அவர்கள் கல்விக்காக கடினமாக உழைக்க வேண்டும். ஆசிரியர் சொல்வதைக் கூர்ந்து கவனித்து கொள்வது சிறந்தது.
நண்பர்களுடன் விளையாட்டு மற்றும் கேளிக்கை அதிகமாக காணப்படும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும். இன்று நீங்கள் அம்மன் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 8. அதிர்ஷ்டமான நேரம் பச்சை மற்றும் கரும் நீல நிறம்.

Categories

Tech |