கன்னி ராசி அன்பர்களே..!
இன்று நீங்கள் நினைத்தது நல்லபடியாக நடந்து முடியும்.
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். அனைவரிடமும் பணிவுடன் நடக்க வேண்டும். சுவாசப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தேவையில்லாத பிரச்சனைகளுக்கு நீங்கள் காரணமாக இருந்துவிட வேண்டாம். மனதில் தேவையற்ற வீண் குழப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். நினைத்தது ஓரளவு பூர்த்தியாகும். தேவையான பொருட்களும் உங்களிடம் வந்துசேரும். பெரியோர்களிடம் ஆலோசித்து முடிவெடுங்கள். வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள்.
புத்திசாலித்தனத்துடன் இருக்க வேண்டும். யோசித்து முடிவுகளை எடுங்கள். குடும்பத்தாரிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். இறைவனின் அருள் உண்டாகும். காதலில் உள்ளவர்கள் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்து விட்டு, மாலை நேரத்தில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: பச்சை மற்றும் நீல நிறம்.