தனுசு ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு இன்பமும் துன்பமும் இணைந்த காணப்படும்.
இன்று உங்களுக்கு புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
தெய்வீக நம்பிக்கையால் உங்களுக்கு இன்று புதிய தெம்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் மந்தமாக இருந்தாலும் உங்களுக்கு பண வரவிற்கு குறைவே இல்லை. இன்று உங்களுக்கு கடன்கள் அடையும் சூழல் இருக்கும்.
உத்தியோகத்தில் உள்ளவர்கள் இன்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
உங்கள் மீது உண்மையில் அதிகாரிகளுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். இன்று நீங்கள் உங்களுக்கு கொடுத்த வேலையை வெற்றிகரமாக திட்டமிட்டு செயல்படுவீர்கள். இன்று பெண்களுக்கு சில ஞாபக மறதி வரக்கூடும். இன்று உங்களுக்கு எதிலும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இன்று நீங்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். எதிலும் எச்சரிக்கை அவசியம் ஆகும்.
மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் பொழுது நீங்கள் எதையும் யோசித்து பார்த்து செய்யுங்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஒற்றுமை இருக்கும். ஆனால் சின்ன சின்ன வாக்குவாதங்கள் ஏற்படும். அப்பொழுது, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது சிறந்தது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். எந்த ஒரு பிரச்சனை ஆயினும் அது சரியாகிவிடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்திலான ஆடைகள் அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் ஆக கொடுப்பது சிறந்தது.
அதிர்ஷ்டமான திசை வடக்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பழுப்பு நிறம்.