மீனம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாளில் முன்னர் செய்த உதவிக்கு பலன்கள் கிடைக்கும் நாளாக உள்ளது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் விருத்தி அடையும். இன்று நீங்க நல்ல விஷயத்தை கற்றுக் கொள்வீர்கள். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு விலகிச்செல்லும். பெண்கள் புத்தாடை மற்றும் நகைகள் வாங்க கூடும்.
உங்களுடைய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறிவிடும். உங்களுடைய செயல்களைக் கண்டு மற்றவர்கள் விளக்கக் கூடும். இன்று நீங்கள் அனைவருக்கும் உதவிகரமாக இருப்பீர்கள். கலைத்துறையில் உள்ளவர்கள் சிறிது முயற்சி எடுத்தாலும் வாய்ப்புகள் கைகூடும். இன்று உங்களுக்கு வெளியுறவு தொடர்பு விரிவடையும். வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் கிட்டும். இன்று நீங்கள் புதிய ஒப்பந்தங்களை துணிந்து ஏற்றுக் கொள்ளலாம்.
இன்று நீங்கள் எதிர்பார்த்த புகழ் மற்றும் பாராட்டுக்கள் கண்டிப்பாக கிடைக்கும். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடல் சிறிது ஓய்வாக காணப்படும். இன்று உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான செய்தி வந்து சேரும். அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு சிறிது பணி சுமை இருக்கத்தான் செய்யும். யாரைப்பற்றியும் எவ்விதமான விமர்சனங்கள் தேவை இல்லை.
இன்று நீங்கள் பொறுப்பாகவும் பொறுமையாகவும் இருப்பது சிறந்தது. சகோதர சகோதரிகளின் உறவு உறுதி அடையும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் சரியாகிவிடும். உங்களுடைய பேச்சுக்கு குடும்பத்தார் அனைவரும் கட்டுப்பட்டு நடப்பார்கள். கடன் பிரச்சினை மட்டும் தான் உங்களுக்கு மன வருத்தத்தை கொடுக்கும் படியாக இருக்கும். அதுவும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். நிகழ்காலத்தில் வாழ்வதற்கு நீங்கள் பழகிக் கொள்ளுங்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். கசப்பான காதல் இனிப்பாக மாறக்கூடிய சூழல் உருவாகும். தயவுசெய்து எதையும் பொறுமையாக கையாள்வது சிறந்தது. உங்களுக்கு ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது பழுப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 8 மற்றும் 9. அதிர்ஷ்டமான நிறம் பழுப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.