கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு குழப்பங்கள் கண்டிப்பாக தீர்ந்துவிடும்.
எதிர்பார்ப்புகள் அனைத்தும் கைகூடும். எதிர்ப்புகள் அனைத்தும் விலகி சென்று விடும். இன்று நீங்கள் எதிலும் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். மனதில் இருந்த ஏதோ ஒரு கவலை தீர்ந்து விடும். உங்களுக்கான நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. மற்றவர்களுடைய தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்திற்காக நீங்கள் பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை சரியாகி விடும். விட்ட இடத்தில் நீங்கள் கண்டிப்பாக பாடுபட்டு பிடிப்பீர்கள். நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகளும் உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
இன்றைய நாளில் உங்களுக்கு வீண் அலைச்சல்கள் வர நேரிடும். மனதை தளர்த்திக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவுபெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். மாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியம் பெறும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி உங்கள் பக்கம் நிச்சயம். அக்கம்பக்கத்தினரிடம் நீங்கள் அன்பு பாராட்டுவார்கள். இன்று நீங்கள் குடும்ப பெரியவர்களை மதித்து நடங்கள். பெற்றோர் சொல்வதை கேட்டு நடப்பது சிறந்தது. பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றகரமான நாளாக உள்ளது. மனதில் இருந்த சோகம் அனைத்தும் குறைந்துவிடும். மன அழுத்தங்களுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். இன்று உங்களுக்கு எதிலும் அதிக அளவு நாட்டம் செல்லும். அனைவரிடமும் நீங்கள் எதார்த்தமாக பழகுவீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவர்களுக்கு எதிலும் முன்னேற்றம் காத்திருக்கிறது. கல்வியில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் அனைத்திலும் முன்னேற்றம் காணப்படும். மேற்கல்விகாக எடுக்கப்படும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். நீங்கள் சிவபெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.