Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! வருமானம் தரும்..! வெற்றி கிட்டும்..!!

மீனம் ராசி அன்பர்களே…!
இன்று கடந்த கால சிற்பங்கள் அனைத்துமே விலகி செல்லும்.

உங்களுடைய செயலில் நீங்கள் உற்சாகமுடன் ஈடுபடுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் உள்ளது. வாழ்க்கை துணையின் மூலம் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி இனிதே நிறைவேறும். உபரி பண வருமானம் கண்டிப்பாக கிட்டும். இன்று நீங்கள் செய்யக்கூடிய வேலையில் உங்கள் மனம் திருப்தியடையும். இன்று நீங்கள் ஆன்மிகத்திற்கு சிறிய தொகையை செலவிட நேரிடும். இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு கண்டிப்பாக நல்ல வரன் கைகூடும். முயற்சியில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் பின்னர் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகையை ஈடுபடுத்தாமல் இருப்பது சிறந்தது.

நீங்கள் யாரிடமும் இப்பொழுது கடன் வாங்காமல் இருப்பது சிறந்தது. இன்று நீங்கள் தொழிலை விரிவுபடுத்த கூட எண்ணங்கள் உங்களுக்கு அதிகரிக்கும். மனதை தைரியமாக வைத்துக் கொண்டு எதையும் செய்வது மிகவும் நல்லது. இன்று நீங்கள் யோகா மற்றும் தியானப் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உங்களுக்கு மனம் தெளிவு பெறும் மற்றும் அறிவாற்றல் அதிகரிக்கும். கணவன் மனைவி இருவரும் விட்டுக் கொடுத்து செல்வது மிகவும் சிறந்தது.
நீங்கள் விட்டுக் கொடுத்து மற்றும் முன்கோபத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது. காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைக்கூடும். இன்று நீங்கள் அவசரம் காட்டாமல் இருப்பது நல்லது. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். ஞாபகத் திறன் குறைய சற்று வாய்ப்பு உள்ளது. அதற்கு நீங்கள் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பது மிகவும் நல்லது. இன்று நீங்கள் படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது மிகவும் நல்லது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் சூரிய பகவான் மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்திலான ஆடைகள் அணிவது சிறந்தது.

அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 4 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் இளம் பச்சை நிறம்.

Categories

Tech |