சிம்மம் ராசி அன்பர்களே…!
இன்று உங்களுக்கு மன உளைச்சல் காணப்படும்.
பாடல்கள்கேட்பது அல்லது திரைப்படங்கள் பார்ப்பது மூலம் மனமகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்ளலாம். முக்கிய முடிவுகளை எடுப்பது இன்று தவிர்த்து விடுதல் நல்லது. உங்களின் பணியிட சூழல் சிறப்பாக இருக்காது. உங்களின் பணியில் அங்கீகாரம் கிடைக்காதது போல் உணர்வீர்கள்.இன்று உங்களின் துணையுடன் மனம் திறந்து பேசுவதற்கு தயங்குவீர்கள். அவரால் புறக்கணிக்க படுவது போல் உணர்வீர்கள்.இன்று உங்களின் நிதி நிலையைப் பற்றி பார்க்கும் பொழுது பணப்புழக்கம் குறைந்தே காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.இன்று உங்களின் அடிப்படை தேவை மற்றும் நிதி நிலையை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும். இன்று உங்களின் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும் பொழுது செரிமான சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆதலால் நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ணவேண்டும் நீரை அதிகமாக பருக வேண்டும். மாணவ மாணவியர்களுக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் மனம் தெளிவு பெறும் அறிவாற்றல் அதிகரிக்கும்.இன்று நீங்கள் முருகன் வழிபாடு செய்வது நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்டமான எண் 9.
அதிர்ஷ்டமான நிறம் காவி நிறம்.