Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! பணவரவு சீராக இருக்கும்..! தடைகள் நீங்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே…!
இன்று அரசு உதவி, புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாகவே இருக்கும்.

வாழ்க்கையில் நல்ல மாற்றங்களும் இனிய திருப்பங்களும் ஏற்படக்கூடும். புதிதாக நீங்கள் எடுக்கும் வேலைக்கான முயற்சியில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். நீங்கள் இருக்கும் வீடு மாற்றலாமா என்ற சிந்தனையும் இருக்கும். இன்று நீங்கள் மற்றவர்களுக்கு வேண்டும் என்பதை செய்து கொடுப்பீர்கள். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது கவனம் தேவை. நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது சிறந்தது. இன்று நீங்கள் ஆலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறந்தது. இன்று நீங்கள் கடனாக கொடுத்த பணம் கையில் வருவதும் சில சிக்கல்கள் வந்து சேரும்.

கொஞ்சம் பொறுமையாக இருங்கள் கண்டிப்பாக பணம் கை வந்து சேரும். அதற்காக நீங்கள் தேவை இல்லாத மன வருத்தத்தை உண்டாக்க வேண்டாம். முன்கோபம் மற்றும் வாக்குவாதங்களும் தேவையில்லை. இன்று நீங்கள் ஆன்மீக பயணம் செல்லக் கூடிய வாய்ப்புகள் உள்ளது. சுற்றுலாக்கள் சென்று மனதை மகிழ்விக்கும் நாளாகவும் உள்ளது. பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொண்டு மனதை மகிழ்ச்சியாக வைப்பீர்கள்.காதலில் உள்ளவர்களுக்கு காதல் கண்டிப்பாக கைகூடும்.காதலில் உள்ள சிக்கல்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். இன்று திருமண தடைகள் கூட விலகி செல்கிறது.
மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். இன்று உங்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். மேல் கல்விக்கான முயற்சியில் வெற்றி வாய்ப்புக்கள் கிட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. இளம் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சித்தர் மற்றும் குரு பகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் இளம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |