விருச்சிகம் ராசி அன்பர்களே…! இன்று எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதிகளை கண்டிப்பாக கொடுக்க வேண்டாம்.
தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழல் தொந்தரவைக் கொடுக்கும் கவனம் கொள்ளுங்கள். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கையை கொடுக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள் பாதுகாப்பில் கவனத்தை பின்பற்ற வேண்டும். தீ, ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். மிக முக்கியமாக விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது ரொம்ப ரொம்ப கவனம் வேண்டும். பெண்கள் நகைகளை தயவுசெய்து இரவல் கொடுக்க வேண்டாம். நீங்களும் இரவல் வாங்க வேண்டாம். தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதற்காகவும் நீங்கள் கவலைப்படவும் மாட்டீர்கள். வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
பங்குதாரர்களுடன் இருந்து வந்த நீண்ட நாள் பிரச்சினைகள் ஒரு சுமூக முடிவை கொடுக்கும். காதலர்களுக்கு இன்றை நாள் இனிமையான நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்பவர்கள் கொஞ்சம் கவனமாகவே ஈடுபடுங்கள். எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்த பின்னர் அதில் ஈடுபடுவது ரொம்ப ரொம்ப நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லதுங்க. வெள்ளை எப்பொழுதுமே உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம் நிறம்.