துலாம் ராசி அன்பர்களே…!
இன்று ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்க கூடிய நாளாக இருக்கிறது.
இன்று நீங்கள் காரியத்தை திட்டமிட்டு செய்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை நிறைவேற்றி கொடுப்பீர்கள். வாக்குறுதிகளை பூர்த்தி செய்து கொடுப்பீர்கள். இன்று உங்கள் மனதிற்கு பிடித்தவரையே கரம்பிடிக்க சூழல் உருவாகிறது. காதல் கைக்கூடி இன்பத்தை கொடுக்கும். இன்று நீங்கள் உறுதியும் தன்னம்பிக்கையும் மிக்கவராகத் திகழ்வீர்கள். அடுத்தவர்களுடைய நம்பிக்கைக்கு நீங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் கூடிய வாய்ப்பு உள்ளது. இன்றைய நாள் உங்களுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி கூடும். செயல்திறன் அதிகரிக்கும் மற்றும் உங்களுடைய செயலில் வேகம் கூடும்.
சில நேரங்களில் பிள்ளைகள் உங்கள் மனம் வருந்தும்படி பேசுவார்கள். அதனை நீங்கள் கொஞ்சம் பொருத்து கொள்ளுங்கள். மற்றபடி வேறு எந்த பெரிய பிரச்சினைகளும் இல்லை.
எந்த ஒரு விஷயத்தையும் யோசித்து செயல்படுவது சிறந்தது. நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கவனத்துடன் பேச வேண்டும். நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. உங்களுடைய ரகசியங்களை நீங்கள் யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். இன்று உங்களுக்கு வசீகரமான தோற்றமும் அழகான முக கவர்ச்சியும் அமையக்கூடும். எதிரிகளின் தொல்லை ஏதும் இல்லை. மாணவ மாணவியர்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். சக மாணவர்களிடம் பழகும் போது கவனம் தேவை. இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது அடர் நீலம் நிறத்தில் ஆடைகள் அணிவது சிறந்தது. அடர் நீலம் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் சனிபகவான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனை பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்டமான எண் 5 மற்றும் 6. அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் நீலம் நிறம்.