Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…! திருப்பங்கள் ஏற்படும்..! காரியங்கள் கைகூடும்..!!

துலாம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும்.

இன்று உங்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற நற்செய்தி காத்திருக்கிறது. இன்று உங்களுக்கு வாகன மாற்றங்கள் ஏற்படும். இன்று நீங்கள் வாகனம் புதிதாக வாங்க கூடிய யோகம் ஏற்படும். இன்று உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உங்களுடைய சொல்லுக்கு அவர்கள் கட்டுப்பட்டு நடப்பார்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்கும். இருவருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிட்டும். இன்று நீங்கள் உங்கள் முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு ஆன்மீக பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி அடையும்.

இன்று உங்களுடைய நேர்மையான எண்ணங்களால் வாழ்க்கையில் நீங்கள் அடுத்த கட்டத்திற்கு சென்று விடுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். உங்கள் மூத்த சகோதரர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடிய சூழ்நிலை உருவாகும். இன்று உங்களுக்கு வழக்குகள் ஓரளவு சாதகமான பலனை கொடுக்கும். வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த அளவு தீர்ப்பு கூடும். எதிரிகளின் தொல்லை ஏதும் இல்லை. இன்று உங்களுக்கு பிரச்சினைகளை சமாளிக்க கூடிய ஆற்றல் உள்ளது. கடன் பிரச்சினைகளில் நீங்கள் தயவுசெய்து தலையிட வேண்டாம். நீங்கள் பணத்தை எண்ணிப் பார்த்து வைப்பது சிறந்தது. இன்று காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். காதலில் உள்ள சிரமங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும். மாணவியர்களுக்கு எதிர்பாராத அளவு திருப்பங்கள் ஏற்படும். விளையாட்டுத்துறையில் சாதிக்க கூடிய வல்லமையும் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி பாடங்களை கற்பது சிறந்தது. இன்றைய நாள் தேர்தல் நாள் ஆதலால் அனைவரும் வாக்களிப்பது மிக முக்கியமானதாகும். அனைவரும் 100 சதவீத வாக்குபதிவு செய்வது. தயவு செய்து அனைவரும் வாக்களியுங்கள், புதிய சமுதாயத்தை உருவாக்குங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை செய்யும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். இன்று நீங்கள் முருகப் பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்டமான எண் 1 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.

Categories

Tech |