துலாம் ராசி அன்பர்களே…!
இன்றைய நாள் நீங்கள் மற்றவருக்கு அழுக்காக எந்த ஒரு உத்தரவாதத்தை கொடுப்பதை தவிர்ப்பது சிறந்தது.
இன்று உங்கள் வாழ்க்கை தரம் உயரும். நீங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.
நீங்கள் வெற்றி பெற தடைகளை தாண்டி உழைக்க வேண்டி இருக்கும். கடுமையான உழைப்பிற்கு கண்டிப்பாக நல்ல பலன் கிட்டும். இன்று நீங்கள் உங்கள் பெரியோரின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும். பெரியோரின் சொல்லுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். வாக்கு வன்மையால் உங்களுக்கு எல்லா வகையான நன்மைகளும் கிடைக்கும். இன்றைய நாள் உங்களுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை.
தொழில் மற்றும் வியாபாரம் தான் சிறிது மந்தமாக இருக்கும். அதனை நீங்கள் சரி செய்து கொள்ள வேண்டும். உடல்சோர்வை இருப்பதால் நீங்கள் சுறுசுறுப்பு இல்லாததுபோல் காணப்படுவீர்கள். இன்று நீங்கள் உங்கள் நிதி நிலைமையை சீர் படுத்திக் கொள்ளுங்கள். நிதி நிலைமைக்கு ஏற்றவாறு நீங்கள் செலவு செய்வது நல்லது. பெண்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றகரமான நாளாக இருக்கும். ஓரளவு பிரச்சினை இல்லாமல் சுமுகமாக இருக்கும். இல்லத்தில் உங்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை இருக்கும். பிள்ளைகள் அவ்வப்போது சின்னச் சின்ன தொந்தரவு செய்வார்கள். அதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு பிரச்சினைக்கும் நீங்கள் தீர்வு காண வேண்டும். முன்கோபத்தை தவிர்ப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய ஒப்பந்தங்களை நீங்கள் படித்து பார்த்து பின் கையொப்பம் இடுவது சிறந்தது. புதிய வாய்ப்புகளை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளப் பாருங்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த இடமாற்றங்கள் நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தீ போன்ற ஆயுதங்களை பயன்படுத்தும் பொழுது கவனம் தேவை. காதலில் உள்ளவர்களுக்கு இன்று துணிச்சல் அதிகரிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும்.
நீங்கள் சிறிது நேரம் ஒதுக்கி படித்த பாடத்தை படித்தபின் எழுதிப் பார்ப்பது நல்லது. நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடைகளை அணிவது சிறந்தது. இன்று நீங்கள் விஷ்ணு பெருமான் வழிபாடு மேற்கொள்வது உங்களுக்கு நல்ல பலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண் 2 மற்றும் 7. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பிங்க் நிறம்.