விருச்சிகம் ராசி அன்பர்களே..!
இன்று திட்டமிட்ட செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள்.
ஆதாயம் சிறப்பாக இருக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளக்கூடிய யோகம் உண்டாகும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு எதிரியால் இருந்த தொல்லைகளும் நீங்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். மனதினை தெளிவுபடுத்த வேண்டும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிலமுக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கேட்ட இடத்தில் பணவுதவி கிடைக்கும். பெண்களால் வாழ்க்கைதரம் உயரும். காதலில் வழிபடக்கூடிய சூழல் உண்டாகும்.
சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். எதையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். எதிலும் அலட்சியம் காட்டக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்துவிடுங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.