மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும்.
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனசிலிருந்த குறைகள் சரியாகிவிடும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். பழைய பாக்கிகள் வசூலாகும். நேர்மையான எண்ணங்கள் மேலோங்கும். சிறப்பான பணிகளை கவனித்து பாராட்டுகள் பெறக்கூடும். உயர் பதவிகள் கிடைக்கும். அனைத்து வகையிலும் நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் கிடைக்கும். தடைப்பட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரவு சிறப்பாக இருக்கும்.
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். இன்றையநாள் புத்துணர்ச்சி பெறும் நாளாக இருக்கும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சியளிக்கும். காதலில் உள்ளவர்களுக்கு பிரச்சினை இல்லாத நாளாக இருக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். பெற்றோரை மதித்து நடக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.