மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று நண்பர்கள் உங்களை வாழ்த்தக்கூடும்.
தொழில் வியாபாரம் செழித்து வளர தேவையான மாற்றங்களை செய்வீர்கள். லாபம் அதிகரிக்கும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மனைவியிடம் அன்பு செலுத்துவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். சமரச பேச்சுவார்த்தையில் நல்ல தீர்வுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக்கூடும். வருமானம் இருமடங்காகும். சம்பள உயர்வு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். சிலரிடம் கருத்து வேற்றுமை ஏற்படக்கூடும்.
வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று நீங்கள் துணிச்சலுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் வெற்றிப் பெறுவீர்கள். காதலில் உள்ளவர்களுக்கு நல்ல நாளாக இன்றைய நாள் அமையும். முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர்நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர்நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டையும், நந்தி-பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறியளவு தயிர் சாதத்தை அண்ணன் தானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: அடர்நீலம் மற்றும் சிவப்பு நிறம்.