Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு…! சிக்கல்கள் தீரும்..! திறமைகள் வெளிப்படும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..!
இன்று சிவன் வழிபாட்டால் சிந்தனைகளில் பெற்றிப்பெரும் நாளாக இருக்கும்.

கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்கக்கூடும். நிர்வாகத்திறமை வெளிப்படும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். சாமர்த்தியத்தன்மை வெளிப்படும். சிக்கல்கள் தீரும். மனதில் இனம்புரியாத கவலை இருந்துக்கொண்டே இருக்கும். தேவையில்லாத சிந்தனைகளுக்கு இடங்கொடுக்க வேண்டாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வாகன செலவுகளும், வீட்டுச் செலவுகளும் இருக்கும். பெண்கள் செய்யும் காரியங்களில் இருந்த தடை நீங்கும். பெண்களுக்கு முன்னேற்றம் தரும் வகையிலேயே சூழல் அமையும். எதிர்ப்புகள் விலகிச் செல்லும். பணவரவு அதிகரிக்கும்.

இன்று உங்களுக்கு சுமுகமான நாளாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். காதலில் உள்ளவர்கள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நடக்கும். திருமண வாய்ப்புகள் கைகூடும். மாணவ மாணவியர்களுக்கு முன்னேற்றம்தரும் வகையில் கல்வி அமையும். மேற்கல்விக்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். இன்று முக்கியமான வேலையை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சாம்பல் நிறத்தில் ஆடை அணியவேண்டும். சாம்பல் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு, எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னதானமாக கொடுத்து வாருங்கள் இன்றைய நாள் நல்ல நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: சாம்பல் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |