கடகம் ராசி அன்பர்களே..!
பிறரின் அதிருப்திக்கு ஆளாகாமல் நடந்துகொள்வது நல்லது.
தொழில் வியாபாரம் சராசரியளவில் இருக்கும். சேமிப்பு பணம் செலவுகளுக்கு பயன்படும். பயணத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். பணியில் குழப்பங்கள் ஏற்படும். மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். தேவையில்லாத பிரச்சினைகளில் ஈடுபட வேண்டாம். குடும்ப பெரியவர்களை மதித்து நடக்க வேண்டும். கோபத்தை விட்டுவிட வேண்டும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். உடன் இருப்பவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
மற்றவர்களுக்கு உதவிச் செய்யும் பொழுது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எந்தவொரு விஷயத்திலும் முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் சிரமப்பட்டு பாடங்களை படிக்க வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணியவேண்டும். அடர்நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும்.அப்படியே பெருமாள் வழிபாட்டை மேற்கொண்டு வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் அடர்நீல நிறம்.