மீனம் ராசி அன்பர்களே..!
இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரிளவில் இருக்கும்.
பணவரவு முக்கிய செலவுக்கு பயன்படும். சமரசம் பேசுவதில் நிதானம் வேண்டும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற வாய்ப்புகள் தோன்றும். வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வியாபாரம் தொடர்பான செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். செயலில் வேகம் அதிகரிக்கும். நிதி மேலாண்மை சீர்படும். குடும்பத்தாருடன் அன்பை வெளிப்படுத்துங்கள். யாரிடமும் கோபமில்லாமல் பேசுங்கள்.
வாக்குறுதிகளை நிறைவேற்றி விடுவீர்கள். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். காதலில் உள்ளவர்கள் அன்பை வெளிப்படுத்த வேண்டும். கோபமான பேச்சினை தவிர்த்துவிடுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள் இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் இளம்பச்சை நிறம்.