நாளைய பஞ்சாங்கம்
06-07-2022, ஆனி 22, புதன்கிழமை, சப்தமி இரவு 07.49 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி.
உத்திரம் நட்சத்திரம் பகல் 11.44 வரை பின்பு அஸ்தம்.
அமிர்தயோகம் பகல் 11.44 வரை பின்பு மரணயோகம்.
நேத்திரம் – .1
ஜீவன் – 1/2.
ஆனி திருமஞ்சனம்.
ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
தனிய நாள்.
புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00.
நாளைய ராசிப்பலன் – 06.07.2022
மேஷம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரிடும். மனஉறுதியோடு பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும். மனஅமைதி குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். இதுவரை இருந்த கடன் பிரச்சினைகள் சற்று குறையும்.
கடகம்
உங்களின் ராசிக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு நீங்கள் பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக சில தடைகள் இருந்தாலும் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி
உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியம் சிறப்படைந்து சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உடன்பிறப்பிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் சற்று மந்தநிலை காணப்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களின் உதவியால் பிரச்சினைகள் ஓரளவுக்கு குறையும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகளிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு தனவரவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உறவினர்களால் குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
மகரம்
உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியாக எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. தூர பயணங்களில் கவனம் தேவை.
மீனம்
உங்களின் ராசிக்கு மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.