மீனம் ராசி அன்பர்களே…! இன்று உங்களுடைய செயல்களில் தடுமாற்றம் கொஞ்சம் ஏற்படலாம்.
மனதில் இனம் புரியாத கவலை இருந்து கொண்டே இருக்கும். நண்பரின் ஆலோசனை நம்பிக்கையை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணி நிறைவேறும். உணவு உண்பதில் கண்டிப்பாக கட்டுப்பாடு வேண்டும். பொருட்கள் இரவில் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் மூலம் நன்மை இருக்கும்.
மாணவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் உண்டாகும். கல்வியில் அக்கறை கொள்ள வேண்டும். பெண்களுக்கு பணவரவு நல்லபடியாக இருக்கும். வேலை பார்ப்பவர்களுக்கு வெற்றிகள் குவியும். மன தைரியம் கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கடன் பிரச்சனை ஓரளவு சமாளிக்க கூடும். வசீகரமான தோற்றம் என்று ஓரளவு வெளிப்படும்.
கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்திலும் தயவுசெய்து வாக்குவாதங்கள் மட்டுமில்லாமல் நடந்து கொண்டாள் போதுமானது. காதலில் உள்ளவர்களும் இதே நிலையை கடைபிடிக்க வேண்டும்.பேச்சில் கடுமை காட்டாமல் நடந்துகொள்ளவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.
வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லை இந்த சித்தர்கள் வழிபாடு குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானம் கொடுத்து வாருங்கள். இன்றைய நாள் வாழ்க்கையில் உங்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். கர்ம தோஷங்களும் தீரும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் ஒன்று மட்டும் ஆறு. அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.