கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று தனவரவு கூடும் நாளாக இருக்கும்.
எதிரிகள் விலகிச்செல்வார்கள். எதிர்ப்புகளும் குறைந்துவிடும். நண்பர்களின் உதவி நன்மையைக் கொடுக்கும். காதலில் பயப்படக்கூடிய சூழலும் உண்டாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை உண்டாகும், எனவே நிதானம் தேவை. நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இடத்தில் நிதானத்தை கடைபிடியுங்கள். காரியங்களில் இருந்துவந்த தடைகளும், தாமதமும் விலகிச்செல்லும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபட வேண்டும். உங்களுடைய பாடங்களில் கவனத்தை செலுத்துங்கள்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 7.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.