Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு..! ஆதரவு கிடைக்கும்…! மகிழ்ச்சி பெருகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள்.

பொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவரின் சந்திப்புகள் கிட்டும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். எந்தவொரு காரியத்தையும் துணிச்சலாகவே நீங்கள் செய்து முடிப்பீர்கள். தேவையான பண உதவிகளும் கிடைக்கும். சுப நிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும். ஆனால் மனதில் மட்டும் இனம் புரியாத குழப்பம் இருந்துக்கொண்டே இருக்கும். பணம் விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருங்கள்.

சரியான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியத்தைப் பேணி பாதுகாத்து வாருங்கள். மாலை நேரங்களில் சிறிது நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். மனதை நீங்கள் ஒருநிலை படுத்திவிட்டால் வெற்றி மேல் வெற்றி வந்துச்சேரும். குடும்பத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகள் இல்லாமல் சுமுகமாக இருக்கும். இன்றைய வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடைவதால் சில முக்கிய நபர்களின் ஆதரவு கிடைக்கும்.

பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு ஓரளவில் முன்னேற்றம் தரும் வகையில் பங்குகள் அமையும். இன்று நீங்கள் முழு முயற்சியுடன் எதிலும் ஈடுபட்டாலும் வெற்றி பெறுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கும் கல்வியில் வெற்றி வந்துச்சேரும். விளையாட்டுத் துறையிலும் நீங்கள் வெற்றிப் பெறுவீர்கள்.

இன்று நீங்கள் முக்கியமான வேலையில் ஈடுபடும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறியளவில் தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |