சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாளாக இருக்கும்.
அக்கம் பக்கத்து வீட்டாருடன் பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அனைவரையும் அனுசரித்துச் செல்லவேண்டும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். ஆனால் மனதில் மட்டும் ஒரு விதமான கவலை இருந்துக் கொண்டே இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நல்லது.
இன்றும் உங்களுக்கு சந்திராஷ்டம் தினம் தொடர்வதால் எச்சரிக்கையுடன் நடந்துக் கொண்டால் போதுமானது. வாக்குறுதிகள் எதுவும் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்தும் எதுவும் போட வேண்டும். எந்தவிதமான பொருப்புகளையும் எடுத்துக்கொள்ள வேண்டாம். மிக முக்கியமாக பணம் விஷயத்தில் கவனம் கொள்ள வேண்டும். யாரை நம்பியும் பொறுப்புகளை ஒப்படைக்காமல் அந்த வேலையை நீங்களே முன்னின்று செய்வது நல்லது.
பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள், ஆனால் அவர்களுக்காக நீங்கள் செலவு செய்ய வேண்டியதிருக்கும். காதலில் உள்ளவர்கள் நிதானப்போக்கை வெளிப்படுத்த வேண்டும். கோபமில்லாமல் பேசுங்கள். மாணவர்கள் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்யுங்கள். கல்விக்காக கடினமாக உழைப்பீர்கள். சக மாணவர்களுடன் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும்.
கருநீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும், அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அண்ணதானமாக கொடுத்து வாருங்கள், உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 3 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீல மற்றும் மஞ்சள் நிறம்.