கன்னி ராசி அன்பர்களே..!
இன்று திருமண வாய்ப்புகள் கைகூடும் நாளாக இருக்கும்.
கடல்தாண்டி வரும் தகவல் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பால் சில பிரச்சனைகளும் முடிவுக்குவரும். கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்தளவு லாபம் வராவிட்டாலும் சுமாராக இருக்கும், ஆனால் புதிய ஒப்பந்தங்கள் ஓரளவிற்கு வந்துச்சேரும்.
ஒப்பந்தங்களை படித்துப் பார்த்துவிட்டு பின்னர் கையெழுத்து போடுங்கள். தொழில் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். சிறிய வேலைக்கும் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் கடுமையான உழைப்பிற்கு நல்லபலன் தேடிவரும். சரியான உணவு வகையை எடுத்துக்கொண்டு உடலை வலுப்படுத்துங்கள், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். மனதை ஒருநிலை படுத்துங்கள், காரியத்தில் வெற்றிப் பெறுங்கள்.
அதைப்போல ஆன்மீகச் சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுங்கள் வெற்றி உங்கள்பக்கம் இருக்கும். செய்வதற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வெளிவட்டாரப்புகழ் ஓங்கி இருக்கும். சமூக அக்கறையுடன் எதிலும் ஈடுபடுங்கள்.ஒருசில விஷயங்களில் மட்டும் திட்டமிட்டு செய்தால் வெற்றி நிச்சயம். கணவன் மனைவி இருவருக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமுகமாகவே இருக்கும்.
அதே போல் காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் சுமுகமாக இருக்கும். இன்று நீங்கள் திட்டமிட்டு செய்தால் எதையும் வெற்றிப் பெறலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். வெளிர்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிது தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்கி வாருங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.