கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று நண்பனின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.
தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலையை முறையாக சமாளிப்பீர்கள். கடன் வாங்கக்கூடிய சூழல் உண்டாகும். புதிய நட்பால் முன்னேற்றம் இருக்கும். பொது காரியங்களில் ஈடுபடும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். சிலர் உங்களின் மீது தேவையில்லாத வீண்பழி சுமத்தக்கூடும். உங்களை குறைத்து மதிப்பிட்டு கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருந்தாலும், சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்கும்.
உத்தியோகத்தில் சிறிய இடையூறுகளை சமாளிக்க வேண்டியதிருக்கும். வேலைச்சுமை அதிகமாக இருக்கும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் எச்சரிக்கையுடன் படிக்க வேண்டும். பெரியவர்களிடம் பொறுமையுடனும் நிதானத்துடனும் பேச வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.