துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.
சில இடையூறுகளை நீங்கள் சந்திக்க நேரிடும். விவேகமாக சிந்தித்து செயல்படுவது நல்லது. உங்களின் பணிகளை கவனமாக ஆற்றவேண்டும். அதிகபணிகள் காரணமாக தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. துணையிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. இன்று உங்களுக்கு கூடுதல் செலவினங்கள் காணப்படும். பணவரவிற்கு அதிர்ஷ்டம் குறைந்தே காணப்படும். இன்று உங்களுக்கு முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது. தியானம் அல்லது யோகா போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் இருக்கும். கூடுதல் முயற்சி செய்தால் நற்பயன் பெறலாம். இன்று நீங்கள் சிவ வழிபாடு மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 9.
அதிர்ஷ்டமான திறம்: அடர் மஞ்சள் நிறம்.