தனுசு ராசி அன்பர்களே…! இன்று முன்னேற்றம் அதிகரிக்கும் நாளாக இருக்கும்.
முக்கிய புள்ளிகளின் சந்திப்பு உண்டாகும். பொருளாதார நிலை நல்லபடியாக இருக்கும். நாட்டுப்பற்று உள்ள ஒருவரால் வீட்டு காரியம் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவி செய்து அதன் மூலம் நல்ல மதிப்பையும் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி இருக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முதல் ஆளாக நிற்பீர்கள்.
எந்த ஒரு வேலையும் நிதானமாக செய்வீர்கள். வெற்றிக் கனியை எட்டிப் பிடிப்பீர்கள். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திக்கக்கூடும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சில முக்கிய முடிவுகளையும் எடுக்க கூடும். நண்பர்களின் ஆலோசனை பரிபூரணமாக இருக்கும். தனுசு ராசிக்காரர்கள் திட்டமிட்டு எதையும் செய்தால் வெற்றி உங்கள் பக்கம் இருக்கும். குடும்பத்தாரிடம் கலந்து ஆலோசித்து எந்த ஒரு முடிவையும் எடுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும் பிரச்சனை விலகும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாகவே இருக்கும். மாணவிகளுக்கும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். கடுமையாக உழையுங்கள். என்ற முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும்.
வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே உங்களுக்கு அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள். வாழ்க்கையில் மென்மேலும் நீங்கள் முன்னேற்றத்தை அடையலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 1 மற்றும் 2. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.