Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…! விழிப்புணர்வு உண்டாகும்..! பிரச்சனை தீரும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! என்று விழிப்புணர்ச்சியுடன் செயல்பட நாளாக இருக்கும்.

விரயங்கள் கூடுதலாக இருக்கும். வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும்.புதிய வீடு மாற்றம் செய்யலாமா என்ற எண்ணம் இருக்கும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் மிகவும் கவனம் இருக்கட்டும். அரசியல் துறையினர் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். வீண் செலவுகளை மட்டும் தயவுசெய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.

மற்றவர்களால் மன கஷ்டம் கொஞ்சம் ஏற்படும்.மனதில் பட்டதை அப்படியே நீங்கள் சொல்லி விடுவீர்கள். அதனால் வீண் பழியை நீங்கள் சுமக்க நேரிடும். வீண் பகை தேவையில்லாமல் ஏற்படும். பஞ்சாயத்துக்களில் கலந்துகொள்ள வேண்டாம். யாருக்கும் அறிவுரைகள் சொல்ல வேண்டாம். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருங்கள். பணத்தைக் கொடுத்து யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.

கும்பம்ராசி காரர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் போதும்.குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனைகள் இல்லாமல் சுமுகமாக தான் இருக்கும். கலகலப்பான சூழ்நிலை நிலவும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு வெளிப்படும். காதலில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் சிறப்பான நாளாகவே இருக்கும். பிரச்சனைகள் இல்லை. மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

கல்வியில் வெற்றி பெற கூடிய சூழலும் இருக்கும்.இன்று முக்கியமான பணியில் ஈடுபடும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மென்மேலும் இருக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 5. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் ஊதா நிறம்.

Categories

Tech |