Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! திருப்தி உண்டாகும்..! கவனம் தேவை..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களின் ராசிக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. எந்தவொரு விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. உடன்பிறந்தவர்கள் ஓரளவு அனுகூலமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறமைக்கேற்ற பாராட்டுகளும் கிடைக்கப் பெறுவதால் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. நீங்கள் இன்று நரசிம்மர் வழிபாடு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 1.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.

Categories

Tech |