Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! அனுகூலம் உண்டாகும்…! நிம்மதி இருக்கும்..!!

மீனம் ராசி அன்பர்களே…! என்று அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் கிடைக்கும்.

பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீட்டை விரிவுபடுத்த கூடிய வெற்றிகள் நடைபெறும். பழைய வாகனத்தை புதுப்பிக்கக்கூடிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு கோபம் மட்டும் அதிகமாகவே இருக்கும். அதேபோல குடும்பத்தாரிடமும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். இன்று மனம் இறுக்கமான சூழ்நிலையில் இருக்கும். விட்டுக் கொடுத்துப் பேச வேண்டும். நிம்மதி பெறுவதற்கு தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப ரொம்ப நல்லது. எந்த ஒரு விஷயத்தையும் நிதானமாக அணுகுங்கள். நண்பருடன் எச்சரிக்கையுடன் பழகுங்கள்.

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமாக இருக்கும். கணவன் மனைவி இருவரும் எந்த ஒரு விஷயத்திலும் சண்டை பிடிக்காமல் நிதானமாக இருக்க வேண்டும். வாக்கு வாதங்கள் வேண்டாம். மாணவக் கண்மணிகள் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யுங்கள்.

திட்டமிட்டு செய்யுங்கள் சக மாணவர்களிடம் கோபப்படாமல் இருங்கள்.காதலில் உள்ளவர்களும் கோபப்படாமல் நடந்துகொள்ளவேண்டும். பேச்சில் கவனம் செலுத்த வேண்டும். கொடுக்கல்-வாங்கல் பொருத்தவரை ஓரளவு அனுகூலம் இருக்கும் பிரச்சனை எதுவும் இல்லை. கடன் பிரச்சினை ஓரளவு தலைதூக்காது.

புதிதாக கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம்.உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை பிரச்சனை எதுவும் இல்லை சுமுகமாக இருக்கும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது நல்லது.இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வந்தால் வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றம் இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 3 மட்டும் 6. அதிர்ஷ்ட நிறம் நீலம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |