மீனம் ராசி அன்பர்களே..!
இன்று தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.
வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டியிருக்கும். திடீர் கோபங்கள் உண்டாகக் கூடும். நிதானமாக இருப்பது நல்லது. புத்திசாலித்தனத்தால் எதையும் நீங்கள் சமாளிப்பீர்கள். விஷயங்களை தள்ளிப்போடாமல் உடனடியாக செய்ய வேண்டும். நிதானம் கண்டிப்பாக தேவை. தெளிவான சிந்தனையில் இருக்கும் பொழுது முடிவுகளை எடுக்க வேண்டும். எந்தவொரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆலோசித்து முடிவுகளை எடுக்க வேண்டும்.
முக்கிய தேவைக்காக கடன்கள் வாங்க வேண்டியதிருக்கும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சில நபர்களிடம் விலகி இருக்க வேண்டும். பஞ்சாயத்துகளில் ஈடுபட வேண்டாம். எதையும் யோசித்துச் செய்தால் இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக இருக்க வேண்டும். அவசர பேச்சுக்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் கைகூடும். பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். ஒருவரையருவர் புரிந்துக் கொள்ளக்கூடிய சூழல் அமையும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே நின்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்தவொரு பணியையும் செய்து வாருங்கள், கண்டிப்பாக முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.