Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (31-10-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

31-10-2020, ஐப்பசி 15, சனிக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 08.19 வரை பின்பு தேய்பிறை பிரதமை.

அஸ்வினி நட்சத்திரம் மாலை 05.57 வரை பின்பு பரணி.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

பௌணர்மி விரதம்.

அன்னாபிஷேகம்.

 

இராகு காலம் – காலை 09.00-10.30,

எம கண்டம் மதியம் 01.30-03.00,

குளிகன் காலை 06.00-07.30,

சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

 

நாளைய ராசிப்பலன் –  31.10.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு பணப்புழக்கம் இருக்கும். வீட்டில் ஒற்றுமையும் அமைதியும் உண்டாகும். வீட்டுத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.வியாபார ரீதியில் எடுக்கும் முயற்சி நல்ல பலனை கொடுக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு உடல் நிலையில் சிறு உபாதைகள் உண்டாகும். தொழிலில் வீண் அலைச்சல் ஏற்படும். பணவரவு இருக்கும் அதற்கேற்ப செலவும் இருக்கும். சீக்கிரமாக இருந்தால் பணம் கவலை நீங்கும்.தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவும் உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய பொருட்களை வாங்க ஆர்வம் கூடும்.தொழிலில் மதிப்பு மரியாதையும் பெருகும்.தொழில் ரீதியில் வெளியூர் பயணம் செல்லக்கூடும். பெரியவர்களின் அறிமுகம் உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு எந்த காரியம் செய்தாலும் சிறப்புடன் செய்வீர்கள். உறவினர்களால் சுப செய்தி வீடு வந்து சேரும். நண்பர்களின் அனுகூலம் உண்டாகும். தொழிலில் கொடுக்கல் வாங்கல் திருப்தி நிலையை அடையும். தொழிலில் சிலருக்கு புதிய பொறுப்பு உண்டாகும். வருமானம் இரட்டிப்பாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு வீட்டில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். உடல்நிலை சீராக இருக்கும். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் எதிரிகள் கூட நண்பர்களாக இருப்பார்கள். தொழிலில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். கடன் தொல்லை தீரும்.

கன்னி

உங்களின் ராசிக்கு சோர்வாக இருப்பீர்கள்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் தடை தாமதம் உண்டாகும். தேவையில்லாத வீண் பேச்சுகளை தவிர்க்கவும்.உத்தியோக ரீதியில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனமாக இருங்கள் அதுவே நல்லது.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செய்தி உண்டாகும். நண்பர்களின் உதவி தாமதமின்றி கிடைக்கும். குழந்தைகள் மூலம் பெருமை உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும் கூடும். கொடுத்த கடன்கள் கைக்கு திருப்பி வரும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவீர். நினைத்த காரியம் நல்லபடியாக நடக்கும்.உற்றார் உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் புதிய மாற்றங்களால் லாபம் உண்டாகும். பணவரவு இருக்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடி உண்டாகும். வீட்டில் திடீர் செலவு இருக்கும். பெரியவர்களை அனுசரித்து சென்றால் நல்லது நடக்கும். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கிய பாதிப்பு சீரடையும். தொழிலில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களால் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றம் அளிக்கும்.வீண் செலவுகளை சமாளிப்பதில் பிரச்சினைகள் தீரும். உடல்நிலையில் கவனம் செலுத்துங்கள். வெளி பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு வீட்டில் அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிவ பேச்சுவார்த்தை நல்ல முடிவுக்கு வரும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும். கடன் தொல்லை தீரும். பொருளாதாரத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

மீனம்

உங்களின் ராசிக்கு பயணங்களால் தேவையற்ற அலைச்சல் இருக்கும். சுபகாரியங்களில் இடையூறு இருக்கும். தேவையில்லாத செலவுகளால் கடன் வாங்க கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.உற்றார் உறவினர்கள் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் கிடைக்கும்.

Categories

Tech |