துலாம் ராசி அன்பர்களே..!
இன்று உங்களுக்கு சுமூகமான பலன்கள் கிடைக்கும் நாள் என்றாலும் உறுதியான முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
இன்று உங்களின் செயல் திறமைக்கு பாராட்டு பெறலாம். இன்று உங்களின் தனித்திறமைகள் உங்களை சிறப்பாக செயல்பட வைக்கும். இன்று நீங்கள் நட்பு முறையில் நடந்துக் கொள்வீர்கள். இதனால் உறவில் பரஸ்பரமும் அன்பும் மலரும். இன்று உங்களின் சேமிப்பை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. சிறப்பான ஆரோக்கியத்துடன் இன்று காணப்படுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு இன்று படிப்பில் சற்று மந்தநிலை நிலவும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். இன்று நீங்கள் விநாயகரை வழிபடுவது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 7.
அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு நிறம்.