மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்றைய நாளை முன்கூட்டியே திட்டமிட்டு நடந்துக்கொள்ள வேண்டும்.
முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் பிரச்சனைகளை சமாளிக்கலாம். கவனமுடன் எதிலும் ஈடுபட வேண்டும். சாதகமான பலன்களை பெற அதிக முயற்சிகள் எடுக்க வேண்டும். இன்று சிறப்பான நாளாக இருக்காது. இன்று உங்களின் பணிச்சுமை அதிகமாக காணப்படும். இன்று உங்களின் பொறுமையை இழந்து காணப்படுவீர்கள். இதனை உங்களின் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள்.
இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று பணப்புழக்கம் போதுமானதாக இருக்காது. தேவையற்ற செலவினங்கள் அதிகமாக இருக்கும். உடல் பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றை மேற்கொள்வது ஆரோக்கியத்திற்கு சிறந்தது. மாணவ மாணவியர்களுக்கு இன்று விளையாட்டு மற்றும் கேளிக்கையில் மனம் ஈடுபடும். நண்பர்களிடத்தில் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். இன்று நீங்கள் நரசிம்மர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 2.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் நிறம்.