கும்பம் ராசி அன்பர்களே…! இன்று பேச்சிலும் செயலிலும் பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் உங்களின் ராசிக்கு அனுகூலமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
நெருங்கியவர்களின் உதவியால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேற கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூல பலன் அடைய முடியும்.
பணவரவுகள் இன்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்டமான எண்: 6
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் நிறம்.