Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

நாளைய (01-09-2020) நாள் எப்படி இருக்கும் இது உங்கள் ராசிக்கு…!!

நாளைய  பஞ்சாங்கம்

01-09-2020, ஆவணி 16, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 09.39 வரை பின்பு பௌர்ணமி.

 அவிட்டம் நட்சத்திரம் மாலை 04.38 வரை பின்பு சதயம்.

 சித்தயோகம் மாலை 04.38 வரை பின்பு மரணயோகம்.

 நேத்திரம் – 2.

 ஜீவன் – 1.

 பௌர்ணமி விரதம்.

 வாக்கியப்படி ராகு-கேது பெயர்ச்சி பகல் 02.10.

 

இராகு காலம் மதியம் 03.00-04.30,

 எம கண்டம் காலை 09.00-10.30,

 குளிகன் மதியம் 12.00-1.30,

 சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

நாளைய ராசிப்பலன் –  01.09.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப செலவுகள் ஏற்பட கூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் அவர் திறமைக்கு ஏற்ப உயர்வு கூடும். உத்யோக வளர்ச்சிக்கு புதிய திட்டங்களால் உயர்வு கூடும். பூர்வீக சொத்துக்களில் இருந்து அனுகூலம் பெருகும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சந்தோஷம் பெருகும். தொழிலில் உயர் பதவி கிடைக்கும். பணவரவு நன்றாகவே இருக்கும். சுபகாரியங்களில் நல்ல முயற்சி கிடைக்கும். உத்யோகத்தில் புது ஒப்பந்தங்கள் கை தேடி வரும். உடல்நலம் சீராக இருக்கும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு தொழில் கேர்ப பலன் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். வாகனங்களால் வீண் செலவு வரும். வீட்டில் பெண்கள் பொறுப்புடன் இருப்பார்கள். உறவினர்களால் ஆதரவு கிடைக்கும். உடனே இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும்.

கடகம்

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடலில் ஆரோக்கியம் குறைய நேரும். தேவையில்லாமல் வெளியில் செல்வதால் டென்ஷன், மன குழப்பம் ஏற்படும். மற்றவர் விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும். கொடுத்தல் வாங்கல் விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. தொழிலில் கவனம் அவசியம்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு உடல் ரீதியில் சுறுசுறுப்பு இருக்கும். எந்த செயல் செய்தாலும் ஆர்வமாக செய்து முடிப்பீர். சுபகாரிய நிகழ்ச்சிகளில் சோர்வு சுறுசுறுப்பு பெறுவீர். குழந்தைகளிடம் அன்பாக இருப்பீர். உத்யோகத்தில் லாபம் கிடைக்கும்.

கன்னி

உங்களின் ராசிக்கு வீட்டில் நல்ல செய்தி வந்து குவியும். உறவினர் வருகையால் வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைவர். சுபகாரியங்களில் முன்னேற்றம் பெருகும். தொழில் ரீதியில் வளர்ச்சி கூடும். பணப் பிரச்சினைகள் அகலும். குழந்தைகள் பழக்கத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

துலாம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்கள் வருகையால் செலவு கூடும். தொழிலில் இடம் மாற்றத்தால் மனநிம்மதியை குறைக்கும். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் கொடுக்கும். பெற்றோருடைய அன்பு, ஆதரவு பெருகும். பழைய கடன்கள் அனைத்தும் வசூலாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு தொழிலில் அந்த நிலை நேரும். வீட்டில் தேவையற்ற வீண் செலவுகள் அதிகரிக்கும். உடல்நலத்தில் கவனம் கொள்ளவும். சிக்கனமாக இருந்தால் கடன்கள் குறைய வாய்ப்பு. நண்பர்களால் உதவி பெருகும்.

தனுசு

உங்களின் ராசிக்கு மன நிம்மதியுடனும், மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபம் கிட்டும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். புத்திர வழியில் இருந்து சுபசெலவுகள் உருவாகும். தொழிலில் மேலதிகாரிகள் நட்பு கூடும். வருமானம் போதுமான அளவு இருக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வீட்டில் சுப நிகழ்ச்சி நடைபெறும். சுப முயற்சிகளில் அனுகூலம் பெருகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களுடன் நட்பு பெருகும். லாபம் காண்பீர்.புதிய பொருட்களை வாங்க ஆர்வமாக இருப்பீர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்புகள் கூடும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். வெளியூர் செல்வதற்கு வாய்ப்புகள் அமையும். உத்யோகத்தில் இருப்பவர்களிடம் ஆதரவாக இருப்பீர். புதிய தொழிலை தொடங்கும் முயற்சி கைகொடுக்கும். புது நட்பு கிடைக்கும். தடங்கலான காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

மீனம்

உங்களின் ராசிக்கு தேவையற்ற செலவுகள் வரும். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடு வரும். உங்களின் அலட்சியப் போக்கால் தொழிலில் சரிவு ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவி பெருகும். சிறிது நிதானம் தேவை.

Categories

Tech |