கன்னி ராசி அன்பர்களே..!
இன்று உங்களுடைய அறிவுத்திறமை அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றிக்கிடைக்கும். தேவையான பண உதவியும் எதிர்பார்க்கக்கூடும்.
திறமையாக செயல்பட்டு பாராட்டுக்கள் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடுத்தவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். கலைத்துறை சார்ந்தவர்களின் ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பிரச்சனை ஏதுமில்லை.
உடன் இருப்பவர்களால் சில பிரச்சனைகள் வரக்கூடும், அதைமட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். யாரைப்பற்றியும் விமர்சிக்க வேண்டாம். அலட்சியம் காட்டாமல் காரியங்களை எதிர்கொள்ளுங்கள். பெரியவர்களின் ஆலோசனைப் படி எந்தவொரு வேலையையும் செய்தாள் இன்று முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். காதலில் உள்ளவர்களுக்கு இன்று பேச்சில் நிதானம் தேவை.
இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம்பச்சை நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளம்பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும், அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுத்து வாருங்கள் இன்றையநாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும், தோஷங்களும் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: இளம்பச்சை மற்றும் நீல நிறம்.