துலாம் ராசி அன்பர்களே..! இந்த உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ள வேண்டும்.
தேவையற்ற இடமாற்றங்கள் போன்றவை உண்டாகும். மற்றவர்களுக்காக பரிந்து பேசும் பொழுதும் உதவி செய்யும் பொழுதும் கவனமாக இருந்து கொள்ளுங்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. சரியான ஆவணங்கள் எடுத்துக் கொண்டு செல்லுங்கள். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படி யான சூழ்நிலை உருவாகலாம்.
சிலர் உங்களை பேச்சில் காயப்படுத்த கூடும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுங்கள் ஆனால் பிரச்சனை ஏதுமில்லை. அன்பு வெளிப்படும். பிள்ளைகளுடைய கல்வியில் கொஞ்சம் அக்கறை கொள்ளுங்கள். மாணவர்களும் நிதானத்துடன் பாடங்களை படிக்க வேண்டும். கல்விக்காக கொஞ்சம் கவனமாகவே உழைக்க வேண்டும்.
பொருளாதாரத்தைப் பொறுத்தவரை பிரச்சனைகளை சுமூகமாக இருக்கும். தொழிலும் நல்லபடியாகவே நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அன்பை செலுத்துவீர்கள். மாலை நேரங்களில் கொஞ்சம் நடை பயிற்சி மேற்கொண்டால் உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும்.
நல்ல உணவை எடுத்துக்கொள்ளுங்கள் சத்தான உணவை சாப்பிடுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் நீங்கள் ஆடை அணியவேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காக்கைக்கு எள் கலந்த சாதத்தை கொடுத்து வாருங்கள். இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். தோஷம் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிஷ்ட எண் 5 மற்றும் 9. அதிர்ஷ்ட நிறம் சிவப்பு மற்றும் நீல நிறம்.