தனுசு ராசி அன்பர்களே..!
சந்தோச எண்ணங்களால் உற்சாகம் உண்டாகும்.
பிறருக்கு உதவிகளை செய்து கொடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய அணுகூவம் உண்டாகும். இன்று எடுத்த காரியம் நல்லபடியாக வெற்றிப்பெறும். கடந்தகாலத்திலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். தேவையில்லாத குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறக்கூடிய சூழல் உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஈடுபடும்முன் சிந்தித்து செயல்பட வேண்டும். செயலில் வேகம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மேலதிகாரிகளின் அதிர்ப்திக்கு ஆளாவீர்கள்.
அனைவர்மீதும் அன்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான சூழ்நிலை நிலவும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பிரவுன் நிறத்தில் ஆடை அணியவேண்டும். ப்ரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றையநாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு.
அதிர்ஷ்டமான எண்: 1 மற்றும் 3.
அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் ஆரஞ்சு நிறம்.