தனுசு ராசி அன்பர்களே…! இன்று உங்களின் அறிவுத்திறன் கூடும்.
இனிமையான பேச்சு மூலம் நல்ல காரியங்கள் நல்லபடியாக நடக்கும். வசீகரமான தோற்றம் வெளிப்படும். செல்வாக்கு கூடும். செல்வம் சேரும். அரசு தொடர்பான பணியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைத்து விஷயங்களிலும் சாதகமான போக்கு காணப்படும். எதிர்ப்புகள் விலகி செல்லும். உங்களின் செயல்களுக்கு இருந்த தடை நீங்கும். இன்று தேவை இல்லாத கெட்ட கனவுகள் மற்றும் தோன்றும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லலாம்.
மனதில் நிலையான எண்ணம் இருக்காது. தேவையில்லாத குழப்பங்கள் அவ்வப்போது வந்து சேரும். இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு பண நெருக்கடி ஓரளவு குறையும்.எதிர்பார்த்த உதவிகள் இல் காலதாமதம் இருந்தாலும் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை கொஞ்சம் சந்திக்க ஆனால் மனதை மட்டும் நிதானமாக வைத்துக் கொள்ளுங்கள்.உணவு வகையில் சரியான ஆதாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
காதலில் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல நாளாகவே இருக்கும். பிரச்சனை இல்லை. குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு இருக்கும்.இன்று மாணவ கண்மணிகளுக்கு எந்தவித கல்வியில் பிரச்சனை இல்லாமல் சுமுகமாகவே செல்லும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியுங்கள் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள். இன்றைய நாள் மிகவும் நல்ல நாளாக இருக்கும். உங்களுக்கான தோஷமும் குறையும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிஷ்ட எண் 4 மற்றும் 5. அதிர்ஷ்ட நிறம் ஆரஞ்சு மட்டும் வெள்ளை நிறம்.