மகரம் ராசி அன்பர்களே…! இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் பொழுது கண்டிப்பாக எச்சரிக்கை வேண்டும்.
அதேபோல் கவனம் வேண்டும். எதையும் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசனை செய்யுங்கள். பெரியவர்களிடம் கேட்டு கண்டிப்பாக செய்யுங்கள். மனைவியிடமும் கலந்து ஆலோசனை கேளுங்கள்.மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அதேபோது விளையாடும் பொழுதும் எச்சரிக்கையுடன் விளையாடுங்கள். சக மாணவர்களிடம் சண்டை ஏதும் போட்டுக் கொள்ளாமல் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். அரசியல் தொழிலில் உள்ளவர்களுக்கு சீரான பலன் வந்து சேரும். இன்று சிரமம் இருந்தால் கொஞ்சம் முன்னேற்றம் இருக்கும்.உங்களுடைய முயற்சிக்கு தகுந்த பலன் வந்து தீரும்.
வழக்கு விஷயங்களில் இருப்பவர்கள் சில விஷயங்களை தள்ளி போட வேண்டும். நிதானமாக எதையும் செய்ய வேண்டும். தெய்வ பக்தி கூடும். ஆன்மீகத்தில் என்று அதிகளவு நாட்டம் செல்லும். பயணங்கள் ஓரளவு மகிழ்ச்சியை கொடுக்கும். மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். தன்னம்பிக்கை கூடுவதால் வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சனையும் இல்லை. தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது ரொம்ப ரொம்ப நல்லது. காதலில் நல்லவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பிரச்சனை ஏதுமில்லை.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள். இந்த தோஷங்கள் நீங்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு. அதிர்ஷ்ட எண் இரண்டு மட்டும் நான்கு. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை நிறம்.