கும்பம் ராசி அன்பர்களே..! இன்று மனைவியிடம் எந்த ஒரு ஆலோசனையும் கேட்டு செய்வது ரொம்ப நல்லது.
அதுதான் உங்களுடைய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். எதிர்பாராத சில விஷயங்கள் நன்மையில் முடியும் பிரச்சனை இல்லை. குடும்பச் செலவை சமாளிக்க வேண்டி இருக்கும்.தேவையான பண உதவி எடுக்கும் அதிகம் பிரச்சனை இல்லை. வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். நண்பர்கள் உதவுவார்கள். என்று வியாபாரிகள் சிறப்பான முன்னேற்றத்தை பெறக்கூடும்.
லாபம் கூடும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்வீர்கள். எதிரிகளை உதிரிகளாக ஆக்குவார்கள்.இரும்பு தொடர்பான தொழிலில் அதிக வருவாய் வந்து சேரும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலப்படும். இன்றைய நாள் கும்பம் ராசி காரர்களுக்கு பிரச்சனை இல்லாத நாளாக இருக்கும். வெற்றி வாய்ப்புகளும் வந்து சேரும். கணவன் மனைவி இருவருக்கும் அன்பு நிலைத்து காணப்படும். காதலின் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்ல நாளாக இருக்கும்.இன்று வசீகரமான தோற்றத்தினால் புதிதாக காதல் வயப்படும் சூழல் உண்டாகும்.
மாணவ கண்மணிகளுக்கு என்று வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது இள மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். சிறிதளவு எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள். தோஷம் நீங்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு. அதிர்ஷ்டமான எண் 6 மற்றும் 2. அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் இளம் மஞ்சள் நிறம்.