Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (1-11-2020) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

01-11-2020, ஐப்பசி 16, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி இரவு 10.50 வரை பின்பு தேய்பிறை துதியை.

பரணி நட்சத்திரம் இரவு 08.57 வரை பின்பு கிருத்திகை.

பிரபலாரிஷ்ட யோகம் இரவு 08.57 வரை பின்பு சித்தயோகம்.

நேத்திரம் – 2.

ஜீவன் – 1.

 

இராகு காலம் – மாலை 04.30 – 06.00,

எம கண்டம் – பகல் 12.00 – 01.30,

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,

சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

இன்றைய ராசிப்பலன் –  01.11.2020

மேஷம்

உங்களின் ராசிக்கு உடல் ரீதியில் சோர்வு விலகி சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வீட்டில் குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். பணவரவு இருக்கும். பெரியவர்களின் ஆதரவு உண்டாகும்.உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் சிந்தித்து செயல்பட்டால்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர்களால் ஒற்றுமை குறைய கூடும். உடல்நிலையில் மந்த நிலை உண்டாகும். வீட்டு செலவுகளை குறைப்பதால் பணம் நெருக்கடிகளை தவிர்க்கலாம்.மன தைரியத்துடன் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும்.உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் நன்மை உண்டாகும்.

மிதுனம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் அனுகூல பலன் உண்டாகும். உடனிருப்பவர்களின் ஒற்றுமை கூடும். பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க ஆர்வம் கூடும். கடன் தொல்லை தீரும். வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்

உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை அமைதி பெருகும். சுப காரியங்கள் நல்ல முடிவுக்கு வரும். வீட்டில் தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் செல்லக்கூடும். வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். தொழில் ரீதியில் வெளிவட்டார நட்பு உண்டாகும்.உறவினர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு எந்த செயல் செய்தாலும் ஆர்வம் குறைந்து இருக்கும்.தொழிலில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் சிறிது தாமதமாகவே கிடைக்கும். வீட்டில் சுப செலவு உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஆதரவு இருக்கும். தெய்வ வழிபாடு ஈடுபடுவீர்கள்.

கன்னி

உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனம் உளைச்சலோடு இருப்பீர்கள். எந்த வேலை செய்தாலும் காலதாமதம் உண்டாகும்.திவாகர் இதில் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருங்கள் அதுவே நல்லது. மற்றவர்களிடம் வீண் பேச்சை தவிர்க்கவும். வேலையில் கவனம் வேண்டும்.

துலாம்

உங்களின் ராசிக்கு நல்ல செய்தி வீடு வந்து சேரும்.உற்றார் உறவினர்கள் வருகையால் மனதிற்கு மகிழ்ச்சி கூடும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் லாபம் உண்டாகும். பெரியவர்களின் நல்ல மதிப்பை பெறுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் இருக்கும். பூர்வீக சொத்துக்களின் அனுகூலம் கிடைக்கும்.உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் லாபத்தை அடைவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல பலன் கிடைக்கும்.

தனுசு

உங்கள் இராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும். குழந்தைகளால் மன கஷ்டம் உண்டாகும்.வீட்டில் விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சனைகள் தீரும். நண்பர்களின் ஆதரவும் உண்டாகும்.தொழிலில் புதிய மாற்றங்களால் உத்தியோகத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.

மகரம்

உங்களின் ராசிக்கு வியாபாரத்தில் சில இடையூறு ஏற்படும். புதிய பொருட்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளால் மன மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத விதத்தில் பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு குடும்பத்தில் மங்கல நிகழ்வுகள் உண்டாகும். குழந்தைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உத்தியோகத்தில் புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும். சுபகாரிய பேச்சுகள் இருந்த தடைகள் நீங்கி நல்ல பலன் கிடைக்கும்.

மீனம்

உங்களின் ராசிக்கு வீட்டில் பொருளாதார நிலை மந்தமாக காணப்படும். மருத்துவ செலவுகள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோக ரீதியில் வெளிவட்டார நட்பு உண்டாகும்.எந்த முயற்சி எடுத்தாலும் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

Categories

Tech |