ரிஷபம் ராசி அன்பர்களே..!
இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பான நாளாக இருக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்லுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
இன்று சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை நீங்கள் மாற்றிக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளா சிறிய தொல்லைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் குழப்பங்கள், பணம் தட்டுப்பாடு போன்றவை ஏற்பட்டு பின்னர் சரியாகும், எனவே எதையும் திட்டமிட்டு செய்யவேண்டும்.
குடும்பத்தில் இன்று பல ஆறுதலான விஷயங்கள் நடக்கும். எவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதிர்ப்புகள் இருக்காது. நீங்கள் மேற்கொள்ளும் விஷயங்கள் அனைத்திலும் லாபம் உண்டாகும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். யாரையும் குறைகூற வேண்டாம். பணவிஷயத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இன்றும் கணவன் மனைவி இருவருக்குமிடையே சுமூகமான உறவு நிலவும். அதேபோல் காதலில் உள்ளவர்களுக்கும் நல்ல நாளாகவே இருக்கும்.
மாணவ மாணவியர்களுக்கு கல்வியில் கவனம் தேவை. மேற் கல்விக்கான முயற்சியில் வெற்றிக்கிட்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணியவேண்டும், ஏனென்றால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே என்று சூரிய பகவான் வழிபாட்டையும், பெருமாள் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்தவொரு வேலையும் செய்யுங்கள், காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 5.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறம்.