Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! கனவுகள் நனவாகும்..! முன்னேற்றம் ஏற்படும்..!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று பிரியமானவர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். காலை நேரத்திலேயே மகிழ்ச்சிக்குரிய தகவல் வந்துச்சேரும்.

தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கல்யாண கனவுகள் நனவாகும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நண்பர்களுடன் இருந்த பிரச்சனைகள் சரியாகும். மனதில் அவ்வப்போது இனம்புரியாத கவலைகள் இருந்துக்கொண்டே இருக்கும்.

வீண் அலைச்சலை முற்றிலும் தவிர்க்கவேண்டும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமல் இருக்கும், இருந்தாலும் மாலை நேரத்திற்கு பிறகு எந்தவொரு விஷயமும் நல்லதாகவே நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கோபத்தை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

காதலில் உள்ளவர்கள் நிதானப் போக்கையே கடைப்பிடிக்க வேண்டும். கோபமான பேச்சை முற்றிலும் தவிர்க்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணியவேண்டும், ஏனென்றால் அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும், அப்படியே சூரிய பகவான் வழிபட்டை மேற்கொண்டு பெருமாளையும் மனதார நினைத்து வழிபட்டு வாருங்கள் இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: கருநீலம் மற்றும் இளமஞ்சள் நிறம்.

Categories

Tech |