கன்னி ராசி அன்பர்களே..!
இன்று தொழிலில் உள்ளவர்களுக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உங்களுக்கு சேமிப்பு தேவை. கோபத்தைக் குறைத்துக் கொண்டால், சிக்கல்கள் அனைத்தும் தீரும். முன்கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். குடும்ப பெரியவர்களிடம் அன்பை வெளிப்படுத்துங்கள். பெற்றோர்களை கஷ்டப்படுத்த வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் சரியாகும். பிள்ளைகளின் கல்வியில் அக்கறை காட்டுங்கள். பணத்தேவை ஓரளவு பூர்த்தியாகும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும்.
இன்று மனம் மகிழ்ச்சியாக காணப்படும். ஆனால் முன்கோபத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எதிர்பார்த்த உதவிகள் பூர்த்தியாகும். சில விஷயங்களில் தடைகளும் தாமதமும் வந்துசெல்லும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணியவேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறம்.